வடமராட்சி கிழக்கை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி!

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி வடமராட்சி கிழக்கை  வந்தடைந்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம்

திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில், திலீபன் வழியில் வருகிறோம் என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பவனி, இன்று பிற்பகல் 02 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை வந்தடைந்துள்ளது.    

தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக

தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் வடமராட்சி கிழக்கு 

மக்களின் அஞ்சலிக்காக இன்றையதினம் வருகை தந்திருந்தது.

இதன்போது பொது மக்கள் அருட்தந்தை உள்ளிட்ட பலர்  இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a Reply