ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் 4×400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா தங்கப்பதக்கம் வென்றது.

4x400kமீ பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது போட்ஸ்வானா, அதுவும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்லுவதும் இதுவே முதன்முறை.
இந்த வரலாற்று வெற்றியை கொண்டாட அந்நாட்டு ஜனாதிபதி டுமா கிடோன் போகா செப்டம்பர் 29ஆம் திகதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார்.

போட்ஸ்வானாவின் லீக் பெகெம்பிலோ எப்பி, லெட்சில் டெபோகோ, பயபோ என்டோரி, புசாங் கொலன் கெபிநாட்ஷிபி ஆகியோரே 4x400kமீ தொடர் ஓட்டத்தில் சாதனைப் படைத்தனர்.
கடந்த 10 முறை சம்பியன்ஷிப்பை வென்ற அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது. தென்ஆப்பிரிக்கா அணி 3மிடத்தை பிடித்தமை குறிப்பிடதக்கது.





