ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் படுகாயம் ; கால் துண்டிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

ஓமந்தையில் ரயில் மோதி  ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் வவுனியா – ஓமந்தைப் பகுதியில் பயணித்த வேளையிலேயே ஒருவர் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார். 

ரயில் மோதி படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *