மன்னாரில் ஈ சிக்கன் உணவுகளில் புழுக்கள்; புது உணவகத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள்

மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று பல்வேறு சுகாதார சீர்கேடுகள் இயங்கியதன் காரணமாக உணவகம் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல், அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மன்னார் நகரசபை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.

குறித்த உணவகம் எந்த ஒரு வியாபர உரிமமும் இன்றி இயங்கி வந்ததுடன், உணவகத்தின் கழிவுநீர் உரிய விதமாக அகற்றப்படாமல், புழுக்கள், இளையான் உருவாகியும்,

அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை , அத்துடன் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சிய படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராகவும் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *