
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை உலகின் முக்கியமான தருணத்தில் கூடியுள்ளது. உலகத் தலைவர்கள் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒன்றுகூடும் இந்த நேரத்தில், உலகம் பல தசாப்தங்களாக இல்லாத அளவுக்கு பிளவுபட்டதாகவும் வன்முறைமிக்கதாகவும் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

