
பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட ஐவேளை தொழுகையில் குனூத்துன் நாஸிலாவவை ஓதி பிரார்த்திப்போம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பத்வாக் குழுவின் பதில் செயலாளர் அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான் ஆகியோர் இது தொடர்பில் மஸ்ஜித்களின் இமாம்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

