
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் நேற்றைய தினம் உரையாற்றினார். இஸ்ரேல்-–பலஸ்தீன மோதல் முக்கிய பேசுபொருளாக இருந்தநிலையில், பலஸ்தீன மக்களின் தேச உரிமைக்கான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.




