
இலங்கையின் ஊடகத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் பயணப்பாதையில் அனைத்தும் மலர்ப்பாதை எனக் கூறிவிட முடியாது. பல சந்தர்ப்பங்களில் இடர்கள் பலவற்றை சந்தித்துள்ளதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அந்தப் பயணப் பாதையை இந்த 30 ஆவது ஆண்டு நிறைவின் பின் நோக்கிப்பார்ப்பதே எனது இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

