சிறுவர் தினத்தையொட்டி போரின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
இது கிளிநொச்சி பசுமை பூங்காவனத்தில் இன்று நடைபெற்றது
இதன்போது பலர் தாமாகவே முன்வந்து குருதி கொடையினை வழங்கினர்.
‘சிந்திய குருதியை ஒருபோதும் மறக்கிலோம் அன்று சிந்தியதை இன்றும் கொடை செய்கிறோம்’ என எழுகை அமையத்தின் பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.







