கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை!

கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் காணப்படும் குப்பைகளை அகற்றுமாறு பாடசாலை நிர்வாகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பாடசாலையில்  கடந்த காலங்களில் குப்பைக் கழிவுகளை கிராமமாக பிரதேச சபை அகற்றியது. ஆனால் தற்போது இக் குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.

இப் இப்பாடசாலை அமைந்திருக்கும் கொட்டகலை பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

பல முறை கோரிக்கை விடுத்தும் இக் குப்பைகள் அகற்றப்படாமல் காணப்படுகிறது.

எனவே பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன் வந்து உடன் இப் பாடசாலை மற்றும் பாடசாலை அண்டிய பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply