திருகோணமலை – நீலாப்பொல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மூதூர் -பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் கட்டுத்துவக்குடன் நடமாடுவதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபரை சோதனைக்குட்படுத்தியபோது அவரிடமிருந்து கட்டுத்துவக்கு கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




