கிழக்கு மாகாணம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வித் திணைக்கள வட்டடாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டட நிர்மாணம் தொடர்பில் முறைகேடுகள் நடந்ததான குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரும், கருத்தரங்குகள் நடத்தப்பட்டதில் முறைகேடுகள் நடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் ஆசிரிய ஆலோசகர் ஒருவருமே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.




