பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 6.9 ரிச்டர் நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலநடுக்கம் குறித்து பிலிப்பைன்ஸ் சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் 147 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பல வணிக நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மத்திய செபு மாகாணத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





