அப்பாவையும் சித்தப்பாவையும் அமெரிக்காவுக்கு அழையுங்கள்! கோட்டாவின் மகனிடம் கோரிக்கை

நண்பரே உங்களுடைய தந்தைக்கு நம் நாட்டை ஆள முடியாது. எனவே, தயவு செய்து அவரை அமெரிக்காவிற்கு மீண்டும் அழையுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை சிங்களக் குடிமகன் ஒருவர் காணொலி மூலம் ஜனாதிபதியின் மகனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் மக்களிற்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லை. அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஆகவே, தயவுசெய்து மகன் என்ற ரீதியில் உங்கள் தந்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் (சித்தப்பா) இது குறித்து விளக்கப்படுத்தி இந்நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு தம்முடன் வந்திருக்கும் படி கூறுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply