
பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் எமது நாட்டில் மொழிபெயர்ப்பாளர்களின் பணி மகத்தானதாகும். நாட்டில் இடம்பெற்ற 30வருட யுத்தத்துக்கு மொழியும் ஒரு காரணமாகும் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். செம்டெம்பர் 30 சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு அரச மொழி திணைக்களம் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

