முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி வீட்டை விட்டு வெளியேறி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன,
ஆனால், அவர் இன்னும் அதை உத்தியோகபூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தாா்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம்,முன்னாள் ஜனாதிபதி கடந்த மாதம் விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

