
ஒலுவில் களியோடை ஆற்றங்கரையிலிருந்து சிசுவொன்று மீட்கப்பட்டதாக அதிர்ச்சி செய்தியொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியானது. இந்த விவகாரத்தை மையப்படுத்தி பல்வேறு கதைகள் சோடிக்கப்பட்டு சமூவ வலைத்தளங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த அபாண்டமான கட்டுக் கதைகள் உயர் கல்வி நிறுவனமொன்றிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதுடன் அங்கு பயிலும் மாணவிகளை மானபங்கப்படுத்தும் விதமாக அமைந்திருந்தன. குறித்த சிசு பற்றிய பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

