நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மின்னலுன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பலத்த மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.




