புங்குடுதீவு கடற்படை முகாமில் கடற்படை யுவதிக்கு நடந்த கொடூரம்; கடற்படை வீரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம்  – புங்குடுதீவு கடற்படை முகாமில் கடற்படை யுவதியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில்  கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர், அங்கு பணியாற்றிய கடற்படையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கடந்த மாதம் 25 திகதி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இந் நிலையில் அவரை கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள், 

காங்கேசந்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றது. 

இதேவேளை அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சை  வழங்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் இவர்கள் காங்கேசந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

காங்கேசந்துறை பொலிசார் விசாரணைகளின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

மருத்துவ அறிக்கையில் பாலியல் பலாத்காரம் நடைபெற்றமைக்கு உரிய சான்றுகள் காணப்பட்டதால்  கடற்படை வீரரையும், கடற்படை யுவதியையும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிசாரிடம்  ஒப்படைத்தனர்.

ஊர்காவல்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், நேற்றையதினம்  ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் கடற்படை வீரரை முற்றபடுத்திய வேளை, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறு    உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply