Zoom இணைப்பின் போர்வையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையில் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை

 

இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். 

அதன்படி, கணக்கு ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது. 

மேலும் குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு அளிக்கப்படுவதாக சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். 

ஒன்லைனில் கலந்துரையாடலுக்காக சூம் (Zoom) இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் வட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் ஏற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

கணக்குகள் ஊடுருவப்படும் போது, குழுவிலுள்ள மற்றவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. 

அதன்படி, ஒரு கணக்கு ஊடுருவப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்பு கொண்டு பொருத்தமான பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ்  நிலையத்தில் விரைவில் முறைப்பாடளிக்க வேண்டுமெனவும் இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *