
ஸகாத் என்பது வெறுமனே ஒரு தர்மம் வழங்கும் செயற்பாடல்ல. மாற்றமாக, சமூக நீதியை ஸ்தாபித்து வறுமையை ஒழிப்பதற்கான ஒரு முறைமையாகும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், ஸகாத்தின் அந்த வீரியம் மிக்க முறைமையின் பயன்பாடு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதே பொதுவான அவதானம். மூலோபாய ரீதியான சரியான திட்டமிடல்கள் இல்லாமையும் அதிகரித்த நுகர்வு மைய அணுகுமுறைகளுமே இதன் பின்னால் தொழிற்படும் பிரதான காரணிகள் என அடையாளப்படுத்தலாம்.




