ரணிலுக்கு தயிரும் தேனும் வழங்கிய மஹிந்த; கொழும்புக்கு கவனமாக எடுத்துசென்ற பாதுகாப்பு அதிகாரிகள்

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.  

சமீபத்தில் தங்காலையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் இல்லத்திற்கு சென்று அவரது நலம் விசாரித்தபோது, ​​ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த தயிர் மற்றும் தேன் வழங்கப்பட்டுள்ளது.

சிறிது நேரம் பேசிய பிறகு, மகிந்த ராஜபக்ஷ ரணில் விக்ரமசிங்கவை மதிய உணவு சாப்பிட அழைத்துள்ளார். 

மதிய உணவின் போது, ​​எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் எனவும் இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவது அவசியம் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த, இந்த விடயம் குறித்து நாமலுக்கு தெரிவித்து தேவையான உதவிகளை வழங்குவதாக கூறியுள்ளார். 

மதிய உணவுக்கு பிறகு, தேன் மற்றும் தயிர் சாப்பிட்டுள்ளனர்.  அதன் பிறகு, மகிந்த ரணிலுக்கு பல தயிர் சட்டிகளையும் தேனும் வழங்கியுள்ளார். இது கிராமத்தின் நல்ல தேன் மற்றும் தயிர் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தயிர் மற்றும் தேனை மிகவும் கவனமாக கொழும்புக்கு கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *