கம்பஹா, மினுவாங்கொட வீதியில் உள்ள வீதியவத்த சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகமாக பயணித்த லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து பாடசாலை மாணவன் மீது மோதி, பின்னர் ஒரு கார் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விபத்தினை ஏற்படுத்திய லொறியில் மதுபான போத்தலொன்று இருந்ததாகவும் தெரியவருகின்றது.
சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய சாரதி கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







