
இலங்கையில் LGBTQI சுற்றுலாவை அதாவது ஓரினச் சேர்க்கை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் EQUAL GROUND எனும் அமைப்பு ஆரம்பித்திருக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியது. இதனையடுத்து மதங்களின் உயர் பீடங்கள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

