காற்றுடன் கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/169 கிராம சேவகர் பிரிவில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.










