தனியார் காணிக்குள் விவசாயம்; முத்துநகர் விவசாயிகள் கைது!

தனியார் காணிக்குள் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி  முத்துநகர் விவசாயிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை சீனக் குடா பொலிஸாரே  இன்று (11)கைது செய்துள்ளனர்.

குறித்த விவசாயிகள் முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில்  விவசாய நடவடிக்கைக்காக தரையை பதப்படுத்தும் போது அத்து மீறி தனியார் காணிக்குல் நுழைந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இதில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்ததோடு  உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றையும் கையகப்படுத்தியதாக தெரியவருகிறது.

அண்மையில் விவசாய காணி அபகரிக்கப்பட்டதையடுத்து தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை குறித்த முத்து நகர் விவசாயிகள் நடாத்தி வருகின்றனர். 

தற்போது தனியார் காணி எனவும் உரக் கம்பனி ஒன்றுக்கு சொந்தமான காணி எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து  குறித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அண்மையில் பாராளுமன்றிலும் ஊடகங்களிலும் முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு  பேசு பொருளாகியுள்ள நிலையில் இன்று முத்துநகர் விவசாயிகள் கைது செய்யப்பட்டமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதேவேளை எஞ்சிய காணியில் விவசாயம் செய்யலாம் என ஆளுங் கட்சி பிரதியமைச்சர் ஒருவர் பேசியதால்  நெற் செய்கைக்கான தயார்படுத்தலை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *