பிமலின் தலையில் பொறுப்பைச் சுமத்திவிட்டு யாரும் தப்பிக்க முடியாது! மொட்டுக் கட்சி சுட்டிக்காட்டு

 

அரசாங்கத்தின் உள்வீட்டு முரண்பாடுகள் காரணமாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு அரசாங்கத்தினதும் முதலாவது அமைச்சரவை மாற்றம் என்பது ஆளுங்கட்சிக்குள் நிலவும் உள் முரண்பாடுகளின் வெளிப்பாடாகும்.

அவ்வாறான முரண்பாடுகள் காரணமாகவே சந்திரிக்கா அரசாங்கத்தில் தொழில் அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ச, முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது கடற்றொழில் அமைச்சராக மாற்றப்பட்டார்.

அதேபோல அரசாங்கம் என்னதான் மறுத்தாலும் துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் காரணமாகவே பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து அமைச்சுப் பொறுப்பொன்று பறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தின் முழுப்பொறுப்பையும் பிமலின் தலையில் சுமத்தி விட்டு ஜனாதிபதி தன்னையும் ஏனையவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முனைகின்றார்.

ஆனால், உண்மையில் இந்தச் சம்பவத்தில் பிமல் ரத்நாயக்க மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பொறுப்புக் கூறவேண்டியவர்களேயாகும்  என தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *