புதிய சாதனையை படைத்த களுதாவளை மாணவன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம்  களுதாவளை மகா வித்தியாலய மாணவன் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.   

குகன் பகிர்ஜன் என்ற மாணவன் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

இப்போட்டிகள் இன்று தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *