தீபாவளியை முன்னிட்டு விசேட பாடசாலை விடுமுறை

 

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சிக்கு விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படுவதால் அதற்கு பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையை நாடாத்துமாறும் மற்றும் இது சம்பந்தமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *