
ரிதீதென்ன இபோச டிப்போவை மூடி பஸ்களை வாழைச்சேனைக்கு கொண்டு சென்றது அநீதியானது என்றும், அமைச்சர்கள் கூறுவதை அதிகாரிகள் கேட்கிறார்களில்லை என்றும் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, கண்டி மாவட்டத்தின் சில சீரற்ற பாதைகள்,போக்குவரத்து நெரிசல்கள், தடைப்பட்டுள்ள மத்திய அதிவேக பாதை, யாழ்.இறங்கு துறையில் பயணிகள் எதிர்நோக்கும் வசதியீனங்கள் என்பன பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

