5 மாகாணங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

சில இடங்களில் 100 மிமீக்கும் மேலான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோர பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை காலத்தில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும் எனவும், 

மின்னல் தாக்கங்களால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, 

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *