பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான மக்கள் பங்களிப்புடனான வரவுணசெலவுத் திட்டம் தயாரிப்பு புலோலி கிழக்கு 6ம் வட்டாரத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உ.யுகதீஸ் தலமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதில் ஆறாம் வட்டாரத்தில் பருத்தித்துறை பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக முன்னுரிமை அடிப்படையில் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
இன்றைய இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் திரு.உமகாந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், பருத்தித்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், புலோலி 6 ம் வட்டாரத்திற்கு உட்பட்ட சுமார் 120 வரையான கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

