திருமலையில் கனமழை; நெற்செய்கை பாதிப்பு – விவசாயிகள் கவலை!

திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் கனமழை பெய்து வருவதால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

திருகோணமலையில் நெற் செய்கைக்காக விவசாயிகள் தயாராகவுள்ள நிலையில்  இன்று வரை  (20) கன மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

தம்பலகாமம்,கிண்ணியா,முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதுடன் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் தாம் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இன்று வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளதால் வடக்கு – கிழக்கில் இன்றிலிருந்து கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply