தொடரும் கனமழையால் மண்சரிவு அபாயம்; 66 பேர் அச்சத்தில்!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடையறாத கனமழை காரணமாக, லிந்துலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு பகுதி தற்போது கடும் மண் சரிவு அபாயத்தில் சிக்கியுள்ளது.

இப்பகுதியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் தொடர்ந்து அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

2012 ஆம் ஆண்டில் இதே பகுதியில் பாரிய அளவில் மண்மேடு சரிந்து விழுந்திருந்த போதிலும், அந்த மண் இதுவரை அகற்றப்படாதது குறிப்பிடத்தக்கது. 

தற்போது குடியிருப்பின் பின்புறத்தில் ஊற்று நீர் வடிந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் புதிய மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் நேற்று முன்தினம் கூட குடியிருப்பு பின்புறத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் இரவு நேரங்களில் பாரிய உயிர்சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகமும், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும், 

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உடனடியாக கவனம் செலுத்தி,பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *