குடும்பத்தகராறு: மனைவியை கொலை செய்த கணவன்

றம்புக்கனை, மார்ச் 13

றம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேனேபொல பிரதேசத்தில் குடும்ப தகராறின் காரணமாக, கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி நேற்றிரவு கொலை செய்துள்ளார்.

 மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர், பத்தம்பிட்டிய – றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.   

Leave a Reply