மகிந்தவின் நலன் விசாரித்தஅநுர தரப்பு எம்.பி – கைகளை பற்றிக்கொண்டு பேசிய விடயங்கள்

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவளை, மொரகொல்ல ஸ்ரீ புத்தசிரி மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபமொன்று திறக்கப்பட்ட நிகழ்வின்போதே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ நிகழ்வுக்கு வருகை தந்தபோது, அங்கு குழுமியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, பியல் நிஷாந்த, ஜகத் விதான மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் அவரை வரவேற்றனர்.

சந்திம ஹெட்டியாராச்சி, மஹிந்த ராஜபக்ஷவிடம், “எப்படி இருக்கிறீர்கள்? ஐயா, சுகமா?” என்று வினவியுள்ளார். அதற்கு மஹிந்த ராஜபக்ஷ, “குறை இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், “ஐயா, நீங்கள் தங்காலை இ்ருந்தே இந்த நிகழ்வுக்கு வந்தீர்களா?” என்று சந்திம மீண்டும் கேட்க, “ஆம், நான் தங்காலையில் இருந்தேதான் இந்த விழாவுக்கு வந்தேன்” என்று மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, இருவருக்கும் இடையில் சிறிது நேரம் சுமூகமான உரையாடலும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு மிகவும் அன்பாக இந்த கலந்துரையாடலை மேற்கொண்டதால், நிகழ்வில் கூடியிருந்த பலரின் கவனத்தையும் இந்தச் சந்திப்பு ஈர்த்ததாக அறியப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *