கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து; 13 தீயணைப்பு வாகனங்கள் விரைவு; மீட்புப் பணி தீவிரம்

கொழும்பு – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில்இன்று காலை  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக,   13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த குடியிருப்புத் தொகுதியின்  ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மேல் மாடிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மக்களை மீட்பதற்காக ‘ஸ்கைலிஃப்ட்’ (Skylift) வாகனங்கள் இரண்டும் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

தீ விபத்து காரணமாக வெளியேறும் வாயில்கள்  தடைப்பட்டுள்ளதால், இந்த ‘ஸ்கைலிஃப்ட்’ வாகனங்களைப் பயன்படுத்தி சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

இந்தத் தீ விபத்தினால் ஒரு வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அந்த வீட்டில் சிக்கியிருந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *