இன்றும் சரிந்த தங்கம்; மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

 

இலங்கையில்  இன்று  24 கரட் தங்கம் பவுண் ஒன்று 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 294,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply