
றம்புக்கனை – ஹேனபொல பிரதேசத்தில் நேற்று இரவு குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பத்தம்பிட்டிய – றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இதுதொடர்பில் றம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




