பொதுமக்கள் மீது ரஷ்யா துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி என உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ், மார்ச் 13

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 18-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மேலும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறவும், மனிதாபிமான உதவிகள் வழங்கவும் ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சண்டை நடைபெறும் கீவ் பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்கள் மீது ரஷிய படைகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையில், உக்ரைனின் சில நகரங்கள் மனிதாபிமான சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக ரஷிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply