
நீர்கொழும்பு, மார்ச் 13
நீர்கொழும்பு – லெல்லம பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட ரூ.84 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (13) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 570 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இதுதொடர்பில் நீர்கொழும்புபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




