இலங்கை – இந்தியா டெஸ்ட்: 166 ஓட்டங்கள் பின்னிலை, இரண்டாம் நாள் ஆட்டம் இன்று!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதல் இனிங்ஸ்க்காக துடுப்பாடும் இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் மத்தியூஸ் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக தமது முதலாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Leave a Reply