விமானத்தாக்குதலில் காலை இழந்த நபருக்கு செயற்கைக்கால் வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர்!

1990 ஆம் ஆண்டளவில் விமானத் தாக்குதலில் காலை இழந்த நபர் ஒருவருக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே உள்ளிட்ட குழுவினர் இன்று செயற்கை கால் வழங்கியுள்ளனர்.

செயற்கை கால் வழங்கும் நிகழ்வு இந்திய அரசின் நிதி உதவியுடன், யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி நிலையத்தில் முகாம் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் பயனாளி ஒருவர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:

1993 ஆம் ஆண்டு முதல் நான் செயற்கை காலை பயன்படுத்தி வருகின்றேன். அன்று விமானம் மூலம் சுமார் 250 கிலோ கிராம் குண்டு எமது வீட்டுக்கு அண்மையில் வீசப்பட்டது. வீடு தரைமட்டம். எனது மனைவி அங்கேயே இறந்து விட்டார். எனது கால் சிதறி விட்டது. மகனுக்கும் காயம்.

அந்தக் குண்டு தேவாலயங்களை நோக்கி வீசப்பட்டது என்று நினைக்கின்றேன். அது எமது வீட்டில் வீழ்ந்தது. நல்ல வேளை தேவாலயம் மீது வீழ்ந்திருந்தால் சுவாமிமார், வயோதிபர்கள், படிக்கும் மாணவர்கள் என சுமார் 30 வரை இறந்திப்பார்கள். எமது வீட்டில் வீழ்ந்தமையால் இரண்டு பேர் தான் இறந்தார்கள் என்றார்.

Indian High Commissioner donates artificial limb to man who lost leg in air raid

Community Verified icon

Leave a Reply