தனியார் பாடசாலைகள், ரியூஷன்களை பரிசோதிக்கத் திட்டம்

கொழும்பு, மார்ச் 13

தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களைப் பரிசோதிக்கும் சிறப்பு வேலைத்திட்டத்தை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு சில கல்வி நிறுவனங்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

ஒரு சில கல்வி நிறுவனங்களின் நுழைவாயிலில் கை கழுவுவதற்கான அடிப்படை வசதிகளும் இல்லை என்று அவர் கூறினார். மாணவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக, அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்றும் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

Leave a Reply