
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் மற்றும் படகுகள், கப்பற் தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே சிறைச்சாலைகள் இராஜங்க அமைச்சராக செயற்பட்ட லொஹான் ரத்வத்தே, அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளை முழந்தாளிட்டு துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவத்தால் சர்ச்சைக்குள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




