ஆசிரியர் சம்பள முரண்பாடு!

ஆசிாியா் சம்பள முரண்பாடுகளைத் தீா்ப்பதற்கு 30 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றுகல்வியமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரித்தார்.தந்தை எாிபொருள் வாிசையிலும், தாய் சமையல் எாிவாயு வாிசையிலும் நிற்கும் இந்த நேரத்தில் தனிநபா் தரவுப்பாதுகாப்புச் சட்ட வரைவை விவாதிக்க வேண்டிய அவசியமென்ன என்று கவிரத்ன எம்.பி. வினாவெழுப்பினார்.மக்களின் பசியையும் அத்தியாவசிய நுகர்வுப் பொருள்கள் பற்றாக்குறையையும் போக்கும் வகையிலான ஆக்கபூர்வமான உரையாடல்களே இங்கு இடம்பெறவேண்டுமென்றும் அவர் தொிவித்தார். இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர்,
அரசு கல்வித்துறையிலுள்ள விவகாரங்களைத் தீா்ப்பதற்கு அக்கறையின்றியுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவதை முற்றாக நிராகாிக்கின்றோம். 24 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்த அதிபர், ஆசிாியர் சம்பள ஒழுங்கீனங்களுக்கு தீா்வுகாணும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்றார்.

Leave a Reply