வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு

இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இந்திய உயர்ஸ்தானிகர், இவ் உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாக கையளித்தார்.

600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply