இலங்கை மீனவர்கள் ஆறு பேர் சென்ற மீன்பிடி படகு ஒன்று போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது , இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சுமார் 15 பார்சல்கள் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதீக விசாரணைக்காக மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

