போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் மீன்பிடி படகில் சென்ற இலங்கை மீனவர்கள் ஆறு பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது , இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சுமார் 15 பொதிகள் அந்த படகில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக விசாரணைக்காக மீனவர்கள் மற்றும் படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

