டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

டித்வா சூறாவளி காரணமாக நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால் அஞ்சலி நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *